தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சுவைகளை நம் நாக்கின் மூலம் உணர்கிறோம். மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றனர். ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
அன்றாடம் நம் உணவில் அறுசுவைகள் சேர்த்துக்கொள்வது அவசியம். இவை நன்மைக்கு நோயற்ற வாழ்வை வாழ உறுதியான உடல் ஆரோக்யத்தை கொடுக்கும்.