Antonyms Opposites | Opposite Words | எதிர்ச்சொற்கள்
எதிர்ச்சொற்கள் என்பவை எதிர்மறையான கருத்தை விளக்க உதவுகின்றன.இவற்றை Opposite Words or Antonyms அல்லது எதிர்சொல் வார்த்தைகள் என்போம்.
எதிர்ச்சொற்கள் பொதுவாக கீழ் கண்ட முக்கியதுவத்தை கொண்டுள்ளன.
1. ஒரு பொருளின் வித்தியாசத்தை தெளிவாக விளக்க உதவுகிறது. உதாரணம் : உயரம் X சிறிது சூடு X குளிர்ச்சி
2. உறவுகளை விளக்க உதவுகிறது.உதாரணம் :
அண்ணன் X தம்பி அப்பா X அம்மா
3. செயல் எதிர்ச்சொற்கள்
உதாரணம் : முடியம் X முடியாது வெற்றி X தோல்வி
குழந்தைகளுக்கான எளிய 50 எதிர்ச்சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. சரி X தவறு 2. மேலே X கீழே 3. ஆண் X பெண் 4. நன்மை X தீமை 5. வெற்றி X தோல்வி 6. உண்டு X இல்லை 7. உள்ளே X வெளியே 8. பிறப்பு X இறப்பு 9. பழமை X புதுமை 10. முடியும் X முடியாது 11. அழகு X அசிங்கம் 12. அண்ணன் X தம்பி 13. ஆம் X இல்லை 14. அமைதி X இரைச்சல் 15. ஆரம்பம் X முடிவு 16. அனுமதி X மறு 17. அருகில் X தொலைவில் 18. இங்கே X அங்கே 19. இழு X தள்ளு 20. இரவு X பகல் 21. இளமை X முதுமை 22. இனிப்பு X கசப்பு 23. இருள் X ஒளி 24. இயற்கை X செயற்கை 25. ஈரமான X காய்ந்த 26. உள்நாடு X அயல்நாடு 27. உயரமான X குட்டையான 28. ஏற்றுமதி X இறக்குமதி 29. எடு X கொடு 30. எளிய X கடினம் 31. ஏழை X செல்வன் 32. ஒற்றுமை X வேற்றுமை 33. ஒருமை X பன்மை 34. கருப்பு X வெள்ளை 35. கணவன் X மனைவி 36. காய் X கனி 37. கல் X கற்பி 38. காலை X மாலை 39. குளிர் X வெப்பம் 40. கிழக்கு X மேற்கு 41. வடக்கு X தெற்கு 42. கேள்வி X பதில் 43. கூட்டல் X கழித்தல் 44. பெரிய X சிறிய 45. சில X பல 46. சிறுவன் X சிறுமி 47. சுத்தம் X அசுத்தம் 48. சூடான X குளிர்ந்த 49. சூரியன் X சந்திரன் 50. சொர்க்கம் X நரகம்
Download 50 Opposite Words in Tamil chart for Kids