Simma Book Store

Learn My Family Members in Tamil and English |என் குடும்பம்

என்குடும்பம் என்பது நான், என் அப்பா,என் அம்மா , உடன் பிறந்தவர்கள் மற்றும் என் குடும்ப உறுப்பினர்களை குறிக்கும்.

குடும்பத்தில் 2 வகை உள்ளது.
1. தனிக்குடும்பம்
2. கூட்டுக்குடும்பம்

1. தனிக்குடும்பம் என்பது தாய் , தந்தை மற்றும் குழந்தைகள் மட்டும் வசிக்கின்ற குடும்பம் ஆகும் .

2. கூட்டுகுடும்பம் என்பது தாய், தந்தை, குழந்தைகள், தாத்தா ,பாட்டி , மாமா , அத்தை, பெரியப்பா , பெரியம்மா மற்றும் அவர்களின் குழந்தைகள் என அதிகமான உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பம் ஆகும் .

குழந்தைகளுக்கான எளிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. அப்பா – Father
2. அம்மா – Mother
3. அண்ணன் – Elder Brother
4. அக்கா – Elder Sister
5. தம்பி – Younger Brother
6. தங்கை – Younger Sister
7. தாத்தா – Grand Father
8. பாட்டி – Grand Mother
9. மாமா – Uncle
10. அத்தை – Aunt
11. பெரியப்பா – Uncle (Dad’s Elder Brother)
12. பெரியம்மா – Aunt (Mom’s Elder Sister)
13. சித்தப்பா – Uncle (Dad’s Younger Brother)
14. சித்தி – Aunt (Mom’s Younger Sister)
15. அத்தை மற்றும் மாமா மகன்கள் – Cousin Brothers
16. அத்தை மற்றும் மாமா மகள்கள் – Cousin Sisters
17. குழந்தை – Baby

 

Download Free Printable Family Tree Chart

My family members Chart-my family tree chart-என் குடும்பம்-uravugal-sonthangal-genealogy

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now