தமிழ் மொழிக்கு மிகவும் முக்கயமான அடிப்படை எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்.
1. உயிரெழுத்துக்கள்
2. மெய்எழுத்துக்கள்
புள்ளி வைத்த எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் என்று கூறுவர். தமிழ் மெய்எழுத்துக்கள் மொத்தம் 18.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
மெய்எழுத்துக்கள் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கும். மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களை சார்ந்து இயங்கும். இவை தனித்து இயங்காது.எனவே இவற்றை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.
மெய் எழுத்துக்கள் 3 வகைப்படும்.
1.வல்லினம்
2.மெல்லினம்
3.இடையினம்
வல்லின எழுத்துக்கள் – க், ச், ட், த், ப், ற்
மெல்லின எழுத்துக்கள் – ங், ஞ், ண், ந், ம், ன்
இடையின எழுத்துக்கள் – ய், ர், ல், வ், ழ், ள்
இந்த எழுத்துக்களை எளிதாக நியாபகம் வைத்துக்கொள்ள இவ்வாறு படிக்கலாம்.
க ச ட த ப ற – வல்லினம்
ங ஞ ந ம ன – மெல்லினம்
ய ர ல வ ழ ள – இடையினம்
M.Balaji
Contents are excellent 👌👌